கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சாரணியர் மாணவர்கள் பங்கேற்ற ஒருநாள் ” சாரணிய பாசறை ” மத்திய முகாம் வீரத்திடல் அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது
மேற்படி ஒரு நாள் முகாமானது கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் இக் கல்லூரியின் கெடட் பிளடூன் கொமாண்டரும் சாரணிய பொறுப்பாசிரியருமான மேஜர் கே.எம்.தமீம் அவர்களின் வழிகாட்டலில். இடம்பெற்ற மேற்படி சாரணிய பாசறையில் உதவி சாரணிய ஆசிரியரான எஸ்.ஏ.சேகு அஹமட் , முஹம்மட் அஸ்லம் , அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவிடமிருந்து ஜனாதிபதி சாரணிய விருதுபெற்ற ஜனாதிபதி சாரணிய மாணவரான சவ்தாப் ஒசைம் வலியுள்ளாஹ் உள்ளிட்ட பாடசாலையின் சிரேஷ்ட சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சாரணிய பயிற்சி முகாமானது சாரணிய பாட நெறியும், மென் திறன் , களப்பயணமாகவும் அமைந்திருந்ததாக கெடட் பிளடூன் கொமாண்டரும் சாரணிய பொறுப்பாசிரியருமான மேஜர் கே.எம்.தமீம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment