தொடர்ந்தும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், நேற்று(14) எம்பிலிபிட்டிய நீதிமன்றகட்டிட சுற்றாடலில் அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு சட்டத்தரணியாக கடமையாற்றும் விஜித்த புஞ்சிஹேவா அவர்கள், தனது கடமைக்காக துவிச்சக்கர வண்டியில் வந்த சம்பவம் பொதுமக்கள் பலர் மத்தியில் பரபரப்பான பேசுபொருளாகியது.
அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது எடுக்கக்கூடிய தீர்வு இதுவே என்பதனாலேயே இவ்வாறு வந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
"யாரையும் குறைகூறவோ,யாருக்காகவுமோ இதை செய்யவில்லை.பொது போக்குவரத்து சம்பந்தமாக பொதுநடைமுறைகளை உருவாக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்கிறோம்.சட்டத்தரணியின் கட்டணத்தை உயர்த்த முடியாததால் தான் சைக்கிளில் வந்தேன்.நான் காரில் வந்தால் எனது சட்டத்தரணிக்கான கட்டணத்தை கூடுதலாக அறவிட வேண்டி வரும்.மக்களுக்கு இருக்கும் கஸ்டம், துன்பம் எமக்கு தெரியும். அதனால் எஊனக்கா கட்டத்தை மக்களிடம் கூடுதலாக கேட்க வேண்டி வரலாம்." என சட்டத்தரணி விஜித்த புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment