கன்றாவித் தத்துவங்கள் (கவிதை)




கன்றாவித் தத்துவங்கள்
+++++++
Mohamed Nizous


ஒவ்வொரு பவர் கட்டும். சொல்கிறதே
அரை நாளில் மறு வாழ்வு வருமென்று
ஒவ்வொரு போலினுமே சொல்கிறதே
பொறுத்தார்க்கு புள் டேங்கு கிடைக்குமென்று
கரத்தை இருக்கு போக தயங்காதே
இலங்கை வெறுங்கை என்று புலம்பாதே
சனமே ஓ சனமே நீ போலின் நில்லு
டீசல் அது கிடைக்கும் என்று உறுதி கொள்ளு


பிச்சை எடுக்க யோசிப்போம்
பெரிய நாட்டில் யாசிப்போம்
தேர்தல் வரும் போது மட்டும்
தேசப்பிரேமி வாசிப்போம்
மன்னார் பெற்றோல் உண்டென்பார்
மாணிக்கங்கள் உண்டென்பார்
என்ன சொல்லி கெஞ்சினாலும்
யாரும் இல்லை கடன் கொடுக்க
கேஸ் இல்லை என்று சொல்லி
கரண்டு அடுப்பை எடுப்பார்கள்
கரண்ட் இல்லை என்று சொல்லி
ஜெனி வாங்கி வைப்பர்கள்
ஜெனிக்கு டீசல் இல்லையாம்
எல்லாம் இங்கு தொல்லையாம்
ஒரு விளக்கிருந்தால்
அதில் நெய் இருந்தால்-இனி
வாழ்வே ஒளியாகும்
சனமே ஓ சனமே நீ போலின் நில்லு
டீசல் அது கிடைக்கும் என்று உறுதி கொள்ளு

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :