கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (18) கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பிரதம அதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஆர்.எம்.தெளபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயக்கொடியின் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி இணைப்பு அதிகாரி வைத்தியர் ஏ.சி.டில்சாத், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் சுலைமாலெப்பை நாசிறூன் ஆகியோர் கெளரவ அதிகளாக கலந்துகொண்டனர்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, நிந்தவூர் மற்றும் கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, திருக்கோவில் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை, முகம்மதியாபுரம் மருந்து உற்பத்தி நிலையம், காரைதீவு, மருதமுனை மத்திய மருந்தகம் போன்ற இடங்களுக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடப் பொருட்களை குறித்த நிறுவனத்தின் வைத்திய பொறுப்பதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
0 comments :
Post a Comment