மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள காத்தான்குடி கோட்ட முன்னணிப் பாடசாலையான ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று கொமர்ஷல் வங்கியினால் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாகம் கொமர்சல் வங்கி காத்தான்குடி கிளை முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் கொமர்ஷல் வங்கியின் சமூக நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வியந்திரத்தின் மூலம் ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையிலும் பாடசாலைச் செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் கொண்டு செல்லவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.அப்துல் கபூர் தெரிவித்தார்.
மேலும் காத்தான்குடி கொமர்ஷல் வங்கி கிளையின் முகாமையாளர் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களினால் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் குறித்த புதிய போட்டோ கொப்பி இயந்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை(15) பாடசாலை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment