சாய்ந்தமருது-
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் இணைந்து ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆபிரிக்க நாடுகள் மீது தாக்குதல் நடாத்திய போதும், பாலஸ்தீனில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடாத்தியபோதும் முதலில் அங்கு கொல்லப்பட்டதெல்லாம் அப்பாவி பொதுமக்களாகும்.
ஒவ்வொரு போர்க்களத்திலும் இவர்கள் தாக்குதல் நடாத்திய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திகள் முதலில் வெளிவருவது வழமை. அதாவது நேட்டோ படையினர் தாக்குதல் நடாத்தியது பொதுமக்களின் நிலைகள் மீது என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளாகும்.
ஆனால் தற்போது 24.02.2022 இல் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்து நேற்று 28.02.2022 வரைக்கும் ரஷ்ய படையினரின் தாக்குதலில் கொத்துக் கொத்தாக பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது நேரடியாக பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் விமான தாக்குதல் நடாத்தியதாகவோ பதிவுகள் இல்லை.
உக்ரேனிய பொது மக்கள் கொல்லப்பட்டுவிட கூடாது என்ற ரீதியில் மிகவும் நிதானமான தாக்குதலை ரஷ்ய படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
ரஷ்ய படையினரின் தாக்குதலில் 200 உக்ரேன் பொது மக்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிபர் நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால் பொதுமக்களுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களை ரஷ்ய படையினர்களுக்கு எதிராக போர்க்களத்தில் ஈடுபடுத்தும்போது, ரஷ்ய படையினரின் எதிர் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டால், அவர்களை பொது மக்கள் என்று கணிப்பிட முடியாது.
எவர் ஆயுதம் தூக்கி களத்துக்கு சென்று போரிடுகின்றார்களோ அவர்கள் பொதுமக்கள் அல்ல, மாறாக அவர்களும் உக்ரேன் படையினர்களாகும்.
எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் லட்சக்கணக்கான அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை கொலை செய்தவற்றுடன் ஒப்பிடுகையில் ரஷ்ய படையினரின் போர் நடவடிக்கையினை பாராட்டியாக வேண்டும்.
0 comments :
Post a Comment