மருதமுனை றாஸிக் நபாயிஸ் எழுதிய ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி நூல் வெளியீடு



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
டகவியலாளர் றாஸிக் நபாயிஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி நூல் வெளியீடு எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு(19-03-2022)மருதமுனை காரியப்பர் வீதியில் அமைந்துள்ள மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் மர்ஹும் ஆஸாத் காமில் நினைவரங்கில் நடைபெறவுள்ளது.

கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும்,எழுத்தாளருமான கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை.கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளன்.

சிறப்பு அதிதியாக அரசியல் விமர்சகரும்,கட்டுரையாளருமான ஓய்வு நிலை ஆசிரியர் சட்டத்தரணி இஸ்மாயில் பி.மஆரிஃப்,விஷேட அதிதிகளாக ஒய்வு நிலை அதிபர் ஏ.ஆர்.அப்துல் றாசிக்,பிறை எப்.எம்.வானொலி பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,ஓய்வு நிலை நிருவாக உத்தியோகத்தர் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன்,அம்பாறை மாவட்ட சமூக சேவைத் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன்,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும். சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை.கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் நூல் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளார்,அரசியல் விமர்சகரும், கட்டுரையாளருமான ஓய்வு நிலை ஆசிரியர் சட்டத்தரணி இஸ்மாயில் பி.மஆரிஃப் சிறப்புரையாற்றவுள்ளார்.இலக்கிய விமர்சகரும் ஆசிரியருமான ஜெஸ்மி எம் மூஸா நூல் விமர்சன உரையாற்றவுள்ளார். ஒய்வு நிலை அதிபர் ஏ.ஆர்.அப்துல் றாசிக் சமர்ப்பணப் பிரதியைப் பெறவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :