சாய்ந்தமருது ” Flying horzian’s super smash “ கடின பந்து கிறிக்கட் சமரின் 11 வது போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணியினர் 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விரளயாட்டுக் கழகத்தின் 40 வருட புர்த்தியனை முன்னிட்டு நடாத்தப்படும் ” Flying horzian’s super smash “ பௌசி ஞாபகார்த்த கிண்ண 20 இற்கு 20 கடினபந்து கிறிக்கட் சுற்றுக் போட்டியின் 11 வது போட்டி வெள்ளிக்கழமை ( 25 ) மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது அமானா நற்பணி மன்ற தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எல்.பரீட் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறுக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற போட்டியில் சாய்ந்தாமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தாமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணியைச் சேர்ந்த ஆர் றப்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம்.பயாஸ் , ஏ.எம்.டில்ஸான் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :