INA Campus இன் பட்டம் வழங்கும் வைபவம்



அஷ்ரப் ஏ சமத்-
முஸ்லிம் இளம ் பெண்கள் தாமாகவே முன்வந்து அதற்கான ஒரு சுகாதாரக் கல்வி நிலையமொன்றை தெஹிவளையில் உருவாக்கி தாதியர்களாக வெளிவருவதையிட்டு நாம் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். இந்த தொழில் ஒரு புனிதமான தொழில் இதனுடாக நீங்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல உலகிலும் சம்பந்தப்படுகின்றீா்கள். ஆகவே தான் முஸ்லிம் இளைஞா் யுவதிகள் தாதியாா்களாக தமது டிப்ளோமா பாட நெறியைப் பயின்று வெளிவந்து இந்த துறையில் பயிற்சிகளை பெற்று முன்னேற வேண்டும். இக் காலகட்டத்தில் இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் தாதியா் தொழிலுக்கு வெற்றிடம் உள்ளது. என அமைச்சா் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தாா்.

தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதியாா்கள மற்றும் சுகாதாரக் கல்வி நிலையத்தில் தாதியா் டிப்ளோமா, உளவியல்துறை , மருந்தாக்கல் ஆகிய பயிற்சி நெறிகளைப் பயின்ற மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் வைபவம் ஞயிற்றுக்கிழமை (20) ஆம் திகதி பி.எம்.ஜ.சி.எச்ல் நடைபெற்றது. இந் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் றிமாசா முனாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் வாசுதேவ நாணயக்கார கலந்து கெண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் அங்கு தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில் - ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி மே தினம் நடைபெறுவது தொழிலாளா்களுக்கு இளைக்கும் அநீதிகள்.அதில் பெண்களும் பாதிக்கப்படுகின்றனா். தற்போது பெண்கள் பாரிய அளவில் ஆண்களை விட தொழிலாளா்களாக பெருகி வருகின்றனா். நமது பெண்கள் முன்னேறி தமது வாழ்க்கை நாட்டினை உலகினை மாற்றுவதற்கு நம்மை மாற்றிக் கெள்ளல் வேண்டும். நாம் மாறினால் தான் இந்த நாடு மாறும். என அமைச்சா் வாசுதேவ நாணயக்கார அங்கு உரையாற்றினாா்.


இந் நிகழ்வில் பேராசிரியா் சந்திமா விஜயகுணவா்த்தன, பேராசிரியா் ரோமேஸ் ஜயசிங்க, தொழில்கல்வி ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளா் ஹசானி லக்மாளி, டொக்டா் எம்.ஜ.எம். பௌமி, பொறியியலாளா் சுபியன் வாஹாப் உட்பட வைத்திய விரிவுரையாளா்கள் ஓய்வுபெற்ற ஆசிரியா்களும் கலந்து கொண்டனா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :