Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வு ஆரம்பம் - கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்கிறார் சாணக்கியன்!



Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வானது இந்தோனோசியாவின் பாலியில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த அமர்வானது நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அமர்வில் பங்கேற்கும் வகையில் இலங்கை நாடாளுமன்ற குழுவானது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அங்கு சென்றுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் தொடர்பான பல விடயங்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :