குறைபாடுகளை ஒன்லைன் QR முறை மூலம்தெரிவிக்க நடவடிக்கை.- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர்



கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில் தேவையான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது:சுகாதார சேவைகளின் குறைபாடுகளை ஒன்லைன் QR முறை மூலம்தெரிவிக்க நடவடிக்கை -கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர்ஐ.எல்.எம்.றிபாஸ்
எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகள்,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் தேவையான சுகாதார வசதிகள்ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது மக்களுக்கும் எப்போதும் சிறந்த சேவையினை வழங்குவதே எமது நோக்கமாகும் எனகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார் .

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சுகாதார சேவைகள் தொடர்பில் மேற்க்கொள்ளப் படும்விடயங்கள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள்
தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிமனையில் நேற்று (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அரச சுகாதார பிரிவில் குறைபாடுகள் காணப்படின் பொது மக்கள் அறிவிக்க மத்திய அரசின் 1907 எனும் தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும் .

எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவைகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படின் எமக்கு நேரடியாகஅறிவிக்க முடியும் அல்லது மேலும் இதற்கென புதிதாக ஒன்லைன் QR கோட் முறையினை எற்ப்படுத்தி உள்ளோம் இதனை வைத்தியசாலைகள்,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் QR scan stickers ஒட்டப்பட்டுள்ளது .இதனை smart phone மூலம் scan செய்வதன் மூலம் சேவை தொடர்பான விடயங்களை எமக்கு அறிவிக்கமுடியும் என கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் .

இதன் மூலம் எதுவும் குறைபாடுகள் காணப்படின் உடனடியாக நடவடிக்கைகள் எற்ப்படுத்த முடியும் நிலை உள்ளது அல்லது எமது சேவைகள் திருப்திகரமானதாக உள்ளதா? இல்லையா ? என்பதை அவதானிக்க முடியும்இதன் மூலம் மக்கள் சிறந்த முன்னோடி மிக்க சுகாதார சேவையினை பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதன் மூலம் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை மிக்கதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் பேசப்படும் நிலை இன்று உள்ளது .

இவையெல்லாம் எமது பிராந்தியத்தில் உள்ள சுகாதார சேவை ஊழியர்களை கண்டிப்பத்ற்கு அல்ல இன்றுள்ள சூழலில் பொது மக்கள் அரச வைத்தியதுறைசேவையினை பூரணமாக பயன்படுத்தினால் அவர்களின் பொருளாதார சுமையை பெருமட்டில் குறைக்க முடியும்.

ஒரு குழந்தைக்கு வைத்திய செலவுக்காய் சாதாரணமாக (போக்குவரத்து உட்பட) சுமார் 3000 ரூபாய் வரைசெலவு செய்வதாக தெரிய வருகின்றது.ஆனால் எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் உள்ளஅனைத்து அரச வைத்தியசாலைகளிலும் குழந்தைகளுக்கான மருந்து வகைகள் தற்போது கையிருப்பில்காணப்படுகின்றது.

அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சிறந்த நிர்வாக கட்டமைப்பு காணப்படுகிறதுஎமது பிரிவில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் தேவையான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அரச வைத்தியசாலைகளை பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோளை விடுத்தார் .

மேலும் நான் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சுகாதர சேவைகள் தொடர்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு முறையான திட்டமிடல்கள் செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள்செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மக்களுக்கும் சுகாதார சேவைகள் சிறந்த முறையில் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது பிராந்திய பிரிவில் சுகாதர சேவைகளை பெற்றுக் கொள்ள கிராமத்தில் உள்ள மக்களுக்கும்போக்குவரத்து செய்வதில் மிகவும் சிரமமான நிலை காணப்பட்டதுடன் அதிகமான பணம் செலவு செய்துகொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது இன் நிலையில் இவற்றினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசேவைகளை மக்களுக்கும் காலடிக்கு கொண்டு சென்று உள்ளோம் பொதுமக்கள் அரச வைத்திய சேவைகளைபூரணமாக பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.

மேலும் இவ் ஊடக சந்திப்பில் கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி மாஹிர்அவர்களும் கலந்து கொண்டார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :