SLMC, ACMC கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்திருந்த நிலையில்; ஹாபீஸ் நஸீர் மற்றும் முஸாசரப் மாநாட்டில்!!



SLMC, ACMC ஆகிய இரு கட்சிகளும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்திருந்த நிலையில் பாராளமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர் மற்றும் முஸாசரப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

சர்வகட்சி மாநாடு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அபே ஜனபல கட்சியின் வண. அத்துரலியே ரதன தேரர், 11 பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கை தமிழ் அரசு ஆகிய கட்சிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :