மருதமுனை சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் 17வது பாடசாலை தின விழாவும்,பரிசளிப்பும்,கலை நிகழ்வும்.


பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின்(CHILD FIRST ENGLISH COLLEGE)17வது பாடசாலை தின விழாவும்,பரிசளிப்பும்,கலை நிகழ்வும் அண்மையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில் பாடசாலையின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழித் துறையின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஷேட அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க எம்.எஸ்.எம்.றஸ்ஸான்,மகோயா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மருதமுனையின் முதல் பெண் நிருவாக சேவை அதிகாரி அய்மா நிஃமத்துல்லாஹ்,கல்முனை மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், கல்முனை வடக்கு வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.ஹய்லுல் மஸாஹித்,ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பல் வைத்திய நிபுணர் டொக்டர் எம்.ஐ.எம்.நௌஷாட்,தொழில் நுட்ப ஆலோசகர் எம்.ஜே.முகம்மட் சனோஜ்,சி.ஐ.சி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜி.ஹரீஸ்,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.எ.காதர்,ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ்,இம்போட் மிரர் ஊடகவியலாளர் எம்.வை.அமீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கல்முனை நீதவான் நீதிமன்ற சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சப்றின் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

இங்கு பாடசாலையின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழித் துறையின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் உரையாற்றுகையில்:-மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முன்பள்ளிகள் மிகவும் முக்கியமானதாகும்.முன்பள்ளிக் கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கும். ஆரோக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுகின்றது.குளிர் அறைக்குள் இருந்து கற்பதை விட திறந்த அறைகளுக்குள் இருந்து ஓடி.ஆடி கற்பது நல்ல ஆறிவையும்.சிறந்த ஆரோக்கியத்தையும் பெருக்குகின்றது.

கடந்த பதினேழு வருடங்களாக எமது பாடசாலைப் பயணம் தொடர்கின்றது.இந்தப் பயணத்தில் எமது பாடசாலையில் கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி கற்றுவருகின்றனர்.இனிவரும் நிகழ்வுகளில் இம்மாணவர்களை அதிதிகளாக அழைத்து முன்வரிசையில் அமரவைத்த அழகுபார்க்க இருக்கின்றோம்.எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் உரையாற்றுகையில்:-இளம் வயதில் எங்களுக்குக் கிடைக்காத இந்த சந்தர்ப்பம் எமது பிள்ளைகளுக்குக் கிடைப்பதையிட்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.எமது பிள்ளைகள் இந்த திறந்த மேடையில் கூச்சமின்றி ஆடுவதும்,பாடுவதும்,பேசுவதும் சிறப்பம்சமாகும்.முன்பள்ளி கற்றல் என்பது மாணவர்களை வழிப்படுத்துகின்ற, வழப்படுத்துகின்ற துறையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பாடசாலை கடந்த பதினெழு வருடங்களாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியைப் பயிற்றுவித்து சிறந்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றது. இந்தப் பிள்ளைகளைச் சிறப்பாகப் பயிற்றுவித்து வழிகாட்டிய ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும்.பல முன்பள்ளிப் பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும்; மருதமுனை சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரிக்கு நிகராக எந்தப்பாடசாலைகளையும் சொல்ல முடியாது எனத்தெரிவித்தார்.

இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் பரிசுப் பொதிகளும்,நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :