சம்மாந்துறை பிரதேசத்தில் '2015 O/L Batch foundation அமைப்பின் 7 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அப்fனான் தலைமையில் சம்மாந்துறை தேசிய பாடசாலை வளாகத்தில் நேற்று (26) நடைபெற்றது.
சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி எல்லைக்குட்பட்ட 1999ம் ஆண்டில் பிறந்த ஆண்கள் அனைவரையும்அங்கத்தவராகக் கொண்டு செயற்படுகின்றது.
இருந்தபோதும் "ஒற்றுமையே பலம் நண்பர்களேஉலகம்" எனும்தொனிப்பொருளில் கடந்த 7ஆண்டுகளாக பல லட்சத்திற்கும் அதிகமான பணத்தினை தனவந்தர்கள்,சமூக ஆர்வளர்கள்,நலன்விரும்பிகள் மூலமாக திரட்டி பல சமூக சேவைவேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் அமைப்பின் 120க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment