த சக்ஸஷ் அவாட்ஸ் 2021 நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை சக்ஸஷ் எகடமியின் த சக்ஸஷ் அவாட்ஸ் 2021 நிகழ்வு பாசிக்குடா அமாயா ஹோட்டலில் நடைபெற்றது.

வாழைச்சேனை சக்ஸஷ் எகடமியின் பணிப்பாளர் ஏ.என்.எம்.றிழா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சார்க் பிரிவுப் பணிப்பாளர் இராஜதந்திரி என்.எம்.முகம்மட் அனஸ் கலந்து கொண்டார்.

மேலும், அதிதிகளாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி.தயாளினி சசிகுமார், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்; எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஸ்வி, ஆஸ்ரமம் அகமடேஸன் பணிப்பாளர் திருமதி.உசா அருள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மின்இயதவியலாளர் திருமதி.எம்.ஐ.றிஸ்வானா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சர்ஜூன், வைத்தியர் எம்.பி.எம்.மூபிஸ், அருட்தந்தை உதயகுமார், சிறாஜ் எக்ஸலன்ட் கல்லூரிப் பணிப்பாளர் எம்.எம்.நவாஸ், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரி.பத்மதர்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது யூ.கே.ஜி கல்வியினை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், ஆசிரியைகளான திருமதி.என்.ஜே.நஸ்மிலா, செல்வி.எச்.எப்.நஜா, செல்வி.எம்.பி.பிர்தௌசியா, திருமதி.எச்.எம்.எப்.சாஜிதா, செல்வி.ஐ.ஸ்ரீசிவாஜினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு சக்ஸஷ் எகடமியின் புதிய தலைமை ஆசிரியராக திருமதி.தர்சினி ஸ்ரீகாந் நியமிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :