பாரியளவில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பெற்றோல் மற்றும் டீசலின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு பெருமளவில் தணிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் வரிசைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது ஜெட் எரிபொருள் (DSW) மண்ணெண்ணெயாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள 12 பிராந்திய எரிபொருள் களஞ்சியங்களில் மண்ணெண்ணெய் இல்லாததால், கொலன்னாவையில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்க வேண்டியுள்ளது.
தற்போது கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தில் சுமார் 7000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் உள்ளது. அதனால் மண்ணெண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.
தற்போது 37,500 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் 37,500 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் கொண்ட இரண்டு கப்பல்கள் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 11 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment