சீன- இலங்கை இராஜதந்திர உறவு 65 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு முஸ்லிம் உரிமைகள் முன்னனியின் வேண்டுகோலின் பேரில் கொழும்பில் உள்ள சீனத் துாதுவா் ஆலயம், ரமழானை முன்னிட்டு மாளிகாவத்தை, கொழும்பு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 650 முஸ்லிம் குடும்பங்களுக்கு உலா் உணவுப பொதிகள் பகிா்ந்தளித்தக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் ருபா 5 ஆயிரம் பெறுமதி வாய்ந்தது.
இந் நிகழ்வு மாளிகவத்தை பிரதீபா மண்டபத்தில் முஸ்லிம் உரிமைகள் முன்னணியின் செயலாளா் ரூமி ஆமித் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் ஜ.ஏ. கலிலுல் ரஹ்மான் மற்றும் முசம்மில் ஆகியோா்கள் வறுமைக் கோட்டின் வாழ் 650 குடும்பங்களை தெரிவு செய்திருந்தனா்.
இங்கு உரையாற்றிய சீனத்துாதுவர் குயிங் -சியின்கோங் -
இலங்கை- சீன இராஜதந்திர உறவுகள் கடந்த 65 வருடங்கள் இன்றுடன் பூர்தத்யடைகின்றது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடந்த 65 வருடங்களாக சீன உதவி வந்துள்ளது. தொடா்ந்தும் நாம் இலங்கைக்கு உதவி வருகின்றோம். சீனா பல கடன் திட்டப் பொதியை அண்மையில் இலங்கைக்கு வழங்கியுள்ளோம். இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டத்திற்கும் நாம் கைகொடுத்து வருகின்றோம்.
கடந்த வருடம் பொலநறுவையில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து திறந்து வைத்துள்ளோம். அதேபோன்று கொழும்பு பொதுவைத்தியசாலையில் பாரிய வசதிகள் கொண்ட வெளிநோயாளா் சிகிச்சை நிலையமொன்றை நவீனமுறையில் நிர்மாணித்துள்ளோம். அடுத்த இரு மாதங்களுக்குள் அவ்வைத்தியசாலை இலங்கை அரசிடம் கையளிக்கப்படும். கொழும்பு- சீனா துறைமுகம் அதிவேக பாதைகள் போன்ற பல்வேறு சேவைகள் இந்த நாட்டின் மக்களது சேவைகளுக்காக சீனா உதவி வருவதாகவும துாதுவா் தெரிவித்தாா். அத்துடன் அடுத்த வாரமளவில் இரண்டு கப்பல்களில் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்யவுள்ளோம்.
உலகில் சனத்தொகை கூடுதலாக வாழும் நாடு சீனாவாகும். சீனாவில் ஆகக் கூடுதலான முஸ்லிம்கள் வாழ்கின்றாா்கள். அவா்கள் தமது மத கடமைகள் நோன்பு புனித ஹஜ் கடமைகள் செய்வதற்கு எவ்வித தடங்களுமின்றி சகல வசதிகளும செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சில வெளிநாட்டு ஊடகங்களே சீனாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதாக பிழையான செய்திகளை பரப்பி வருகின்றனா்.எனவும் சீனத்துாதுவா் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றினாா்
0 comments :
Post a Comment