விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி



எச்.எம்.எம்.பர்ஸான்-
ழு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நண்பர்களோடு நேற்று (16) விளையாடிக் கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றில் சிறுவன் விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :