மின்சார கட்டணத்தை 82.4 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.



அஷ்ர்ப் ஏ சமத்-
லங்கை மின்சார சபை கடந்த மாா்ச் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மின்சார பாவணைக்கான கட்டனத்தினை 82.4 வீதத்தினால் அதிகரிப்பதற்கு ஆனைக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவா் ஜானக்க ரத்னாயக்க இன்று (26) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.

இதன் படி மின்சார சபை மின்சாரம் வழங்குவதற்காக இலங்கையில் வருடாந்தம் 505 பில்லியன் ருபாவினை செலவு செய்துவருகின்றது. ஆனால் மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 மில்லியன் ருபாய்களே பெறுகின்றது. ஆகவே தற்போது பாவனையுள்ள மின்சார ஒர் யுனிட் பாவனைக்கு குறைந்தது 82.4 வீதத்தினால் அதிகரிப்பினை சபை கோருகின்றது. அவ்வாறு நடைமுறைப்படுத்தும்போது வருடாந்தம் 505 பில்லியன் ருபாவினை முகாமைத்துவப்படுத்த முடியும். எனத் தெரிவித்தாா்.

மாா்ச் 19 ஆம் திகதியில் இருந்து 200 பில்லியன் ருபாவினை நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை அனுமதியை வழங்கவில்லை. ஒரு முறையான திட்டமொன்றை 6 மாதத்துக்கு தயாரித்து அதனை அமுல்படுத்தும்படியும் கோரியு்ளளது.

இலங்கை மின்சார சபை காரியம், டீசல் எரிபொருளுக்கு கடந்த மாா்ச் மாதத்திலிருந்து பெருந்தொகைக் கடனைப் பெற்றுள்ளது. எரிபொருளை கொள்வனவு செய்வதனால் இத் தொகையை உரிய எரிபொருள் கம்பனிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது.மின்சார சபையின் மாதாதந்த வருமான 22 பில்லியன்களாகும். இவற்றில் 18 மில்லியன் ருபாவை தனியாா் கம்பனியிடம் செலுத்தி மின்சாரத்தினை பெற்று பயணாளிகளுக்கு வழங்குகின்றது. அத்துடன் கரியம்,டீசல் 130 வீதம் விலை ஏற்றம் ஏற்பட்டதானல் . 45 வீதம் இலங்கை மின்சார சபை செலவு செய்கின்றது. இதனால் இலங்கை மின்சார சபைக்கு 90 வீதத்தினால் நஸ்டத்தில் மின்சாரத்தினை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவா் தெரிவித்தாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :