சம்மாந்துறையில் '89 Born Boys"அமைப்பின் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேசத்தில் '89 Born Boys அமைப்பின் நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவர் எம்.வை.எம் அனீஸ் தலைமையில் சம்மாந்துறைபுரூட் கார்டீன் உணவகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி எல்லைக்குட்பட்ட 1989ம் ஆண்டில் பிறந்த ஆண்கள் அனைவரையும்அங்கத்தவராகக் கொண்டு செயற்படும் இவ் அமைப்பு இப்தார் ஒன்றுகூடல் மற்றும் டிசம்பர் ஒன்றுகூடல் எனஇரு பிரதான ஒன்றுகூடல்களை நோக்காக வைத்து செயற்படுகிறது.

இருந்தபோதும் "ஒன்றிணைந்த நண்பர்கள் மூலம் அபிவிருத்தி அடைந்த சமுதாயம்" எனும்தொனிப்பொருளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தினை உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு அங்கத்தவர்களின் தனிப்பட்ட பங்களிப்பு மூலமாக திரட்டி பல சமூக சேவைவேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் 44 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட இவ் அமைப்பானதுஇன்று 100க்கு மேல் பட்ட உயிர்ப்பான அங்கத்துவர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் 1989ல் பிறந்த இன்னும் பல நண்பர்கள் எமது அமைப்பில் இணைக்கப்பட வேண்டிஇருப்பதால் இவ் ஒன்றுகூடலுக்கு கலந்து கொண்ட அனைவரும் எமது அமைப்பின் அடுத்த நிகழ்வில்ஒவ்வொரு புதிய அங்கத்தவர்களையும் அறிமுகம் செய்ய வேண்டுமென்றும் நிருவாகத்தினால் வேண்டுகோள்விடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :