இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்
ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் நடாத்திய
சுவாமி விபுலாநந்தரின் 98வது துறவற தின விழா சித்ரா பௌர்ணமி தினத்தில் ( 16) காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்ற இவ் விழாவில் திருமுன்னிலை அதிதியாக சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் நந்தி கொடி ஏற்றி ஆசியுரை வழங்கினார்.
பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
ஆன்மீக அதிதிகளாக
சிவஶ்ரீ இ.மகேஸ்வரக்குருக்கள்,
சிவஶ்ரீ சி.சாந்தரூபன் குருக்கள்,
சிவஶ்ரீ ந.பத்மலோஜன் சர்மா,
சிவஸ்ரீ சுபாஸ்கர் சர்மா
கலந்து வேதபாராயணம் ஓதி சிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கெளரவ அதிதியாக,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி புளொரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக தவிசாளர் கி.ஜெயசிறில் ,பிரதேச செயலாளர்
சி.ஜெகராஜன், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர்
வி.ரி.சகாதேவராஜா, சைவப்புலவர் சு.துஷ்யந்தன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுவாமி பிறந்த இல்லத்தில் விஷேட பூசை நடைபெற்றது. பின்னர் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ,காவி வஸ்திரம் போர்க்கப்பட்டு ,துறவற கீதம் இசைக்கப்பட்டது.
அரங்கில் இசை நாட்டிய நிகழ்ச்சிகள் மேடையேறின.
மாவட்ட செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

0 comments :
Post a Comment