முன்னாள் அமைச்சர், கலாநிதி அல்ஹாஜ் மர்ஹூம் ஏ. ஆர். மன்சூர் அவர்களின் நினைவாக அன்னாரின் அன்பு புதல்வியும் ஏ ஆர். மன்சூர் Foundationயின்
ஸ்தாபகருமான சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுதீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்) அவர்களினால் கல்முனை பிரதேச பாடசாலை மாணவர்களின் நலன்கருதி தனது சொந்த நிதியில் வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வரும்" முக்கிய தேவையுடைய மாணவர்களுக்களின் கல்வியாண்டுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது" இம்முறையும் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, இஸ்லாமபாத், நட்பிட்டிமுனை ,மாளிகைக்காடு மற்றும் மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தேவைகளைக் கொண்டு கொண்டு 500க்கும் மேற்பட்ட முக்கிய தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment