அங்கவீனமுற்ற மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு உலருணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு !



மாளிகைக்காடு நிருபர்-
பாதைகள், மின்சார வசதிகள், குடிநீர் இணைப்புக்கள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மிகப்பின்தங்கிய அம்பாறை வீரகெட பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் குறைகளை ஆராயும் விஜயமும், அங்கவீனமுற்ற மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு உலருணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று (31) இரவு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வேண்டுகோளின் பேரில் வீரகெட பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட உலருணவு பொதிகளுக்கான நன்கொடையை சுவிஸ்லாந்தில் வசிக்கும் சமூக சேவகி ஒருவர் வழங்கியிருந்தார். தொடர்ந்தும் பல வருடங்களாக பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் குறித்த சமூக சேவகி, இந்த பொருட்களை தங்களுக்கு கொண்டுசேர்க்க உதவிய கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உட்பட நிவாரண குழுவினருக்கு இன, பிரதேச பாகுபாடுகளின்றி எங்களை தேர்தெடுத்து இந்த உதவிகளை செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வீரகெட பிரதேச மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்த விஜயத்தில் இந்நிவாரண பணிக்கான உதவிகளை செய்த சமூக சேவகியின் புதல்வர், மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :