சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள், ஊடகத்துறை, கலைத்துறை, அழகுக்கலை போன்ற துறைகளில் தேசிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி விருதை இலங்கை மனித உரிமைகள், மக்கள் பாதுகாப்பு அமைப்பு வழங்கி கௌரவித்தது.
கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வு (30) கொழும்பு பண்டாரநாக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜபுர் றஹ்மான், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியபதி கலபத்தி மற்றும் இலங்கை மனித உரிமைகள், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏ.ஜே.எம்.பாயிஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் (திருமதி) என்.பிள்ளைநாயகம் உள்ளிட்ட 30 பேருக்கான சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி கௌவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment