வட கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் சுற்றுலா துறைக்கு பாரிய பாதிப்பு



அஸ்ஹர் .இப்றாஹிம்-
ட கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் சுற்றுலா துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு , மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை தற்போது மேலும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை பளிங்கு கடற்கரை , நிலாவெளி கடற்கரை பிரதேசம் , மட்டக்களப்பு பாசிக்குடா , பொத்துவில் அறுகம்மை பிரதேசம் என்பன வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப்பிரயாணிகளின் வருகை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பிப்பது வழமை ஆனால் இலங்கையிலுள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடவேண்டிய நிலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாசப் பிரயாணிகள் செய்வதறியாது திண்டாடிக் கொண்டிருப்பதுடன் , இலங்கைக்கு புதிதாக வருவதற்கு தயாராகவுள்ள உல்லாசப்பிரயாணிகளும் தயக்கம் காட்டி வருவதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படும் நுவரெலியா குளிர்கால வசந்தமும் இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :