இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சு இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் ஒகில்வி நிறுவனம் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்கான "சுஹுருலியா" ஈ தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை அண்மையில் அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட மகளிர் விவகார உத்தியோகத்தர் திருமதி.சுரேகா எதிரிசிங்க அவர்களால் நடாத்தப்பட்ட இப்பயிற்சி நிகழ்ச்சியின் பிரதான நோக்கமானது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பெண்களை வலுவூட்டுவதாகும். வணிகத் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்துவதன் மூலம் பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் "சுஹுருலியா" அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தில் புதுமையான வாய்ப்புகளைத் திறந்து, அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க, சமூக கல்வியறிவு, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக கல்வியறிவு மூலம் இதன் மூலம் அனைத்து இலங்கைப் பெண்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதே முக்கிய நோக்கமாகும்.
இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியில் அம்பாறை பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment