வரிப்பத்தான்சேனை கிராமத்தில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையிலே இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் 2014-இல் அல்-அஸ்ஹர்பாடசாலையில் 5மாணவர்களும் 2019 இல் லீடர் ஜூனியர் பாடசாலையில் 5மாணவர்களும் சித்திபெற்றிருந்தனர். இந்நிலையில் இம் முறை 6 பேர் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதுவே கிராமவரலாற்றில் வரலாற்றுச்சாதனையாகும்.
அதனையொட்டி பாடசாலையின் தசாப்ததடம்பதியை முன்னிட்டு அகமகிழ் விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் குறித்த மாணவர்கள் ஆசிரியர்கள் சேவையாளர்கள் பாராட்டப்பட்டனர்.
பாடசாலை அதிபர் யு.கே.நிஹால் தலைமையில் நடைபெற்ற அகமகிழ் விழாவிற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.
அதன்போது வலயக்கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலை அதிபர் நிஹால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷேய்க் யு..ஹாமித் லெவ்வை(மதனி) நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்த 6 மாணவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,இறக்காமம் பிரதேச சபைதவிசாளர் ,முன்னாள் தவிசாளர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment