காலிமுகத்திடல் அருகே நிறுவப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் 24 மணித்தியாலயமும் சமூக சேவை ஊடகவியலாளா்களும் இலக்ரோணிக் ஊடகவியலாளாா்களும் பகல் இரவு பாராது மழை, வெயில் நேரத்திலும் இங்கு பணியில் இருந்து கொண்டு ஊடக ஆவரணை செய்வதாலேயே இந்த அரசுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இங்கு ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது.
இல்லாவிட்டால் இரவோடு இரவாக இந்த இடத்தினை அகற்றிவிடுவாா்கள் இவற்றுக்கு முதன்மைக் காரணம் ஊடகமே
இங்கு சர்வதேச ஊடகவியலாளா்களும் உள்ளுர் ஊடக நிறுவனங்களும் இங்கு வந்து தமது நேரடி விவரணைகளையும் மக்களது வெளிப்பாடுகளை உலக மக்களுக்கு வழங்கிவருகின்றாா்கள். இப்பிரதேசத்தின் பாதுகாப்பு அரனாக பிரதேச ஊடகவியாலாளா்கள் இலக்ரோனிக் ஊடக நிறுவனங்கள் சட்டத்தரணிகள் சங்கங்கள், இளைஞா்கள், பல்வேறு தொண்டா்கள் இருந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. என சிரேஸ்ட ஊடகவியலாளாரான தளுந்து உரையாற்றினாா்.
அனைத்து ஊடக தொழிலாளா்களது சம்மேளத்தினால் நேற்று ( 20புதன்கிழமை) கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலிமுகத்திடலில் உள்ள ”ஹோட்டா கோ கம” எனும் திடலில் மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கையில் உள்ள சகல ஊடக சங்கங்களது பிரநிதிகள் கலந்து கொண்டனா். அத்துடன் அங்கு நிறுவியுள்ள ஊடக மத்திய நிலையத்தில ஊடகச் சந்திப்பொன்றையும் நடாத்தினாா்கள்.இவ் ஊடகவியாலாளா்களது ஆர்ப்பாட்டத்தில் கோட்ட கோ கமவில் தங்கியிருந்த மக்களும் இணைந்து கொண்டு ஊடகவியலாளா்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்தாா்கள்.
இந் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளா்கள் ஹனா இப்ராஹிம் , எம்.ஏ.எம் நிலாம், மற்றும் சிங்கள தமிழ் ஆங்கில மொழி ஊடக அமைப்புக்களின் தலைவா்களும் உரையாற்றினாா்கள்.
ஊடகவியலாளா் தலிந்து உரையாற்றுகையில்
இந்ந நாட்டில் மிக வெகுவாகப் பாதிக்கபபட்டவா்கள் ஊடகவியாலளாா்கள், லசந்த விக்கிரமதுங்க தொட்டு போத்தல ஜயந்த வரையிலான 54க்கும் மேற்பட்ட ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்பட்டாா்கள். காணமல் போகியுள்ளாா்கள். அத்துடன் சிரச, சியத்த போன்ற ஊடக நிறுவனங்களுக்கு குண்டுத் தாக்குதல் இடம் பெற்றன இவைகள் அனைத்து தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளா் காலத்தில் நடைபெற்றவைகளாகும். அத்துடன் சாதாரண பொதுமககள் ஊடகவியலாளா்கள் வாழ முடியாத நிலையில் உள்ளனா். எங்கு சென்றாலும் மக்கள் போலின் வரிசையில் 10,12 மணித்தியாலயங்கள் துன்பப்படுகின்றாா்கள். இந்த நாட்டின் முறையான திட்டமிட்ட பொருளாதாரம் இன்றி நாம் கஸ்டப்படுகின்றோம். அதற்காகவே ராஜபக்ச அரசினையும் ஜனாதிபதியினையும் தமது பதவியிலிருந்து விலகும்படி மக்கள் நாடு முழுவதிலும சர்வதேச மட்டத்திலும் போரட்டங்கள் நடாத்துகின்றனா்.
அன்மையில் மீறிஹானவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்பது ஊடகவியாளலாா்கள் காடையார்களாலும் பாதுகாப்புபடையினராலும் தாக்கப்பட்டு இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றாா்கள். அவா்கள் தமது வாழ்வதாரத்தினை இழந்து குடும்பங்களுடன் பரிதவிக்கின்றனா். இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கே முஸ்லிம்களையும் சிங்களவா்களையும் இலக்காகக் கொண்டு இனத்துவேசங்களை மக்களிடையே பரப்பி அதில் அவா்கள் பதவிக்கு வந்தாா்கள். இதன் விளைவு இந்த நாட்டின் அரசினையும் ஜனாதிபதியையும் சர்வதேச நாடுகள் உதவுவதிலிருந்து நிறுத்திக் கொண்டனா். . என சிரேஸ்ட ஊடகவியலாளார் தளுந்து உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment