வட கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான கராட்டே சுற்றுப்போட்டி நாட்டின் அசாதாரண நிலமை காரணமாக இடைநிறுத்தம்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட மாகாணத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கராத்தே போட்டி கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் மெக்கெய்சர் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
2006 ஆம் ஆண்டுக்கு பின்பு முதன் முறையாக நடைபெற்ற இந்த போட்டியில் வடக்கிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது ஓர் சிறப்பம்சமாகும்.
இந்த போட்டியை ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணம் அதன் தலைவர் ஏ.ஆர்.இக்பால் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த போட்டியில் 90 வீதமான போட்டி நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில் நாட்டில் திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலைமையால் ஏனைய போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :