இக்கட்டான நிலையை இன்னல்களை இல்லாதொழிக்கும் ஆண்டாக அமைய வேண்டும்-இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்-அ.நிதான்சன்
நாடு இன்று இருக்கும் வங்குரோத்து நிலையில் இருந்து மீள இம்முறை மூவின மக்களும் இனம் மதம் பிரிவினை என்பவற்றுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து உள்ளனர். இது நாட்டில் இனப் பிரச்சினையை இல்லாதொழிக்கவும் ஒரு நாட்டினுள் அதிகாரப்பகிர்வுடன் வாழவும் முதலாம் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை என வாழவும் வழிவகை செய்யும் என நம்புகின்றோம். ஆட்சியாளர்கள் யுத்த வெற்றி தொடர்பில் பேசிக் கொண்டு இருந்தாலும் இன்று சிங்கள மக்களும் யுத்தத்தால் இறந்தது தம் சகோதரர்கள் என கூறும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாடு இப்போது இருக்கும் நிலையில் இவ் ஒற்றுமை தொடர்ந்து மேலோங்க வேண்டும்.இதன் மூலம் மூவின மக்களும் சமத்துவமாக வாழவழி சமைக்கும் ஆண்டாக சித்திரை புத்தாண்டு அமைய வேண்டும் எனவும் நாட்டில் முதல் முறை சிங்களவர்கள் தமிழர்கள் மருத்து நீரை நாளை ஒற்றுமையாக வீதியில்(காலிமுகத்திடலில்) நின்றபடி வைத்தும் முஸ்லிம்கள் நோன்பினை ஒன்றாக வீதிகளில் திறந்தும் இனவாத சக்திகளுக்கு எதிரான ஆண்டாக அமைய வேண்டு என வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment