அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களான அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை , சாய்ந்தமருது , கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமான சுலோகங்கள் தாங்கிய ஆர்பாட்ட பேரணி மின்வெட்டு அமுலில் இருந்த போதிலும் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம் ஆகியோரின் வீடுகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இருந்தும் ஆர்ப்பாட்டக் காரார்கள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கல்முனை அலுவலகத்திற்கு முன்னால் சென்றபோதிலும் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.
0 comments :
Post a Comment