சோழர்காலத்தில் நிருமாணிக்கப்பட்டு தூர்ந்து காடுமண்டிக்கிடந்த மடத்தடி மாட்டுப்பளையிலுள்ள மிகவும் பழைமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் அழகிய சிவலிங்கம் ஒன்று தமிழ் மந்நதிரங்கள் உச்சரிக்க தமிழ்முறைப்படி பிரதிஸ்டைசெய்துவைக்கப்பட்டுள்ளது.
இது மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு மேற்காக வயல்சார்ந்த இயற்கை எழில்கொஞ்சும் மருதநிலத்தில் அமைந்துள்ளது.
காடுமண்டிக்கிடந்த அவ்வாலயத்தை துப்பரவுசெய்து பழைமை குன்றாது புனரமைத்து இன்று அதே இடத்தில் அழகான பக்திபூர்வமாக சிவலிங்கமொன்று பக்தர்கள் வழிபாட்டிற்காக பிரதிஸ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
சிவனருள் பவுண்டேசன் அனுசரணையில் மட்டக்களப்பு ஆதீன ஸ்தாபகரும் இயக்குனருமான மு.ஜெயபாலனின் ஏற்பாட்டில் சிவலிங்கம் அம்மனின் கும்பாபிசேகமன்று (6.4.2022)அதிகாலையில் தமிழ்மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்யப்பட்டு பிரதிஸ்டை செய்துவைக்கபட்டது.நிகழ்வில் ஆலயதலைவர் கி.ஜெயசிறில், ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாகசபையினர் கலந்துகொண்டனர்.
சிவலிங்கம் நிறுவுவதற்கான பீடமொன்றுக்கு அடிக்கல்நடும் வைபவம் கடந்த 2022 பெப்ருவரி மாதம்(16)புதன்கிழமை பௌர்ணமியன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment