அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களுக்கும் உகன பிரதேச செயலக அதிகாரிகளுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கடந்த புதன்கிழமை உகன பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உஹன பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
உஹன பிரதேச செயலாளர் திருமதி ஏ.எம்.ஏ. குமாரி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் திருமதி ஏ.எம்.ஏ. குமாரி அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
0 comments :
Post a Comment