சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் அவர்களின்
31 வது வருட நினைவு இன்று
எம்.எம்.ஜெஸ்மின்-
மர்ஹூம் அப்துல்காதர் லெப்பை மரைக்காயர் தம்பதிகளின் ஐந்தாவது செல்வப் புதல்வனாக 1926. 9 .25 இல் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்ஹாஹிம் அவர்கள் பிறந்தார்.
.பாடசாலைக்கல்வியை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பெற்று , 1944 ஆம் ஆண்டுசிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திர பரீட்சையில் சித்தியடைந்து , 1945 ஆம் ஆண்டு ஆசிரியர் கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேறி , இரு வருட பயிற்சிபெற்று பயிற்றப்பட்ட ஒரு ஆசிரியராக வெளி வந்தார்.
1953ஆம் ஆண்டுசின்னமீராலெவ்வை யாசின்வாவா ( வெடிக்காரன்) தம்பதிகளின் ஏக புதல்வி கதீஜாவை தனது வாழ்க்கை துணைவியாக கரம்பிடித்தார்.முஹம்மது அஸ்றப்( ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) ,முஹம்மது அஸ்ஹர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) , முஹம்மது அஜ்வத்( புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரி ) ஆகிய 3 ஆண்களுக்கும் , மர்ஹுமா சித்தி பௌசியா , உம்மு றிபாயா , கன்சுல் நௌபியா ஆகிய பெண்களுக்கும் தந்தையானார்.
எல்லோரும் போற்றக்கூடிய ஓர் உயர்ந்த மனிதானக வாழ்ந்து 4 .4.. 1991 அன்று தனதுவாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்.
தனது 19-வது வயதில் ஆசிரியர் தொழிலில் அடி எடுத்து வைத்தார்
அவர் ஆசிரியர் தொழிலை ஆரம்பித்த காலம் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு இருந்த காலமாகும் . விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே அந்தக் காலத்தில் சேவை செய்து கொண்டிருந்தனர்.முதலில் தனது ஆசிரிய சேவையை கஷ்டப்பிரதேசமான திருகோணமலை குறிஞ்சாக்கேணி அ.மு.க. வித்தியாலயத்தில்ஆரம்பித்தார்.அடுத்து கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார் .
கல்விவளர்ச்சியில் அவர் காட்டிய ஆர்வம் இன்றும்கல்முனைக்குடி மக்களால் நினைவு கூரப்படுகின்றது..
தான் பிறந்தமண்ணிலேயே உள்ள குழந்தைகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றியது. 1952 ஆம் ஆண்டு சாய்ந்தமருது மழ் - ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தை ஆரம்பித்து அதன் முதல்அதிபராக கடமையாற்றினார்.
சாய்ந்தமருது தென்பகுதி மக்களின் கல்விக்கு வித்திட்டதோடு கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் .சாய்ந்தமருது மழ் -ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் அவர் அதிபராக இருந்த காலம் வித்தியாலயத்தின் பொற்காலம் ஆகும் என்று போற்றப்படுகிறது .இவருடைய சேவையின் நீண்ட காலத்தை பாடசாலையின் வளர்ச்சிக்காகவே செலவிட்டிருந்தார்.ஓய்வு பெறும் போதும் இவ் வித்தியாலயத்தின் அதிபர் ஆகவே அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
13 ஆம் கொளணிஅ.மு.க. வித்தியாலயம் , குருநாகல் பக்மிகொல்ல அல் – மினா மகா வித்தியாலயம் , சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் , அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலயம் , சாய்ந்தமருது அ.மு.க. வித்தியாவயம் , கல்முனை ஸாஹிராக் கல்லூரி , அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் இவர் சேவையாற்றியுள்ளார்.
1953 ஆம்ஆண்டில் இலங்கை இஸ்லாமிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நிர்வாக சபைஉறுப்பினராகவும் , கிழக்கு மாகாணக் கிளை , கல்முனை மாவட்டகிளை என்பவற்றின் செயலாளராகவும் , தாய் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து அவர்ஆற்றிய மகத்தான சேவையை மறக்க முடியாது.மூன்றுமொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர் நாட்டின் நாலா புறமும் சிதறுண்டு போயிருந்த முஸ்லிம் ஆசிரியர்களை ஒன்று திரட்டுவதில் அவர் பெரிதும் பாடுபட்டார்.இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்களை இரணத்துக் கொள்வதற்கு இவர்எடுத்துக்கொண்ட பெரு முயற்சியே காரணமாகும்.
சாய்ந்தமருது –மாளிகைக்காடு ஜும்மாபெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுள் ஒருவராகவும் அதன் உப செயலாளராகவும் இருந்து திறம்பட செயல்பட்டார். புதிய கட்டிட நிதி பராமரிப்புமுறைகள் பற்றியும் இவர் சொன்ன காத்திரமான கருத்துக்கள் இன்னும் மீட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
.நெறிப்படுத்தப்பட்டகுர்ஆன் பாடசாலைகள் அமைப்பு , இஸ்லாமிய பழக்க வழக்கங்களுடனான பாலர் பாடசாலை அமைப்புக்கள் , என்பவற்றை உருவாக்குவதற்காக அறிஞர் பெருமக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களுள் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்ஹாஹிம் ஒரு காத்திரமான பாத்திரமாகவே திகழ்ந்தார்.
0 comments :
Post a Comment