வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வும் விஷேட துஆ பிராத்தனையும் நேற்று சனிக்கிழமை (16.04.2022) இடம் பெற்றது.
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின்; தலைவர் ஸட்.எம்.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் மரணமடைந்த கழக உறுப்பினர்களான அல் ஹாஜ் நௌபிர், ஏ.எஸ்.நௌபர், கழக அங்கத்தவர்களின் மரணித்த பெற்றோர்களுக்காகவும் யாஸின் சூரா ஓதப்பட்டு துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, சட்டத்தரணிகளான எச்.எம்.எம்.ராசிக், இல்யாஸ் ரஸ்மி, பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment