அனைத்து அதிபர் ஆசிரியர்களும் ஒற்றுமையுடன் நாளை (25) திங்கட்கிழமை நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.எ.எஸ்.நாதன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து சுகயீன போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எரிபொருள் விலையேற்றத்தால் ஆசிரியர்கள்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு கடமையாற்றக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்;குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எனவே எமக்கு உடனடி தீர்வை அரசு வழங்க வேண்டும் என கோரி எமது எதிர்ப்பை வெளிக்காட்ட அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment