சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானதுவெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.
அல்-உஸ்வா பிலாண்டேசன் உரிமையாளர் இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தலைமையில்இந்த மஞ்சள் அறுவடை இன்று(20) இடம் பெற்றது.
அல்-உஸ்வா பிலாண்டேசன் வாளாகத்தில் மொத்தமாக எட்டு பாத்திகளில் பயிர்செய்கைசெய்யப்பட்டிருந்தது.அதில் 4000 கிலோ மஞ்சள் அறுவடையின் போது கிடைக்கப்பெற்றது.
இந்த அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையிலானகுழுவினர் ,சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ. எம் . நளீர்,சம்மாந்துறைபொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment