அனைத்து பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி!



அஷ்ரப் ஏ சமத்-
னைத்து பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியத்தினால் ”கோட்டா ஹோ கோாம் தற்போதைய அரசு உடன் பதவி விலகல் வேண்டும். எனும் கோசத்துடனான ஆர்ப்பாட்டப் பேரணி 24 ஞயிற்றுக்கிழமை பி.பகல் கோட்டை ரயில்வே நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது கோட்டைப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வீதித்தடைகளை விதித்து நீதிமன்ற உத்தரவையும் மாணவா்களிடம் காண்பித்தனா். இதனையும் மீறிய மாணவா்கள் மருதானை, பொரளை வழியாகச் நடை பவணியாகச் விஜேராம மாவத்தையில் பிரதமரின் வீட்டுக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த வீதித் தடைகளையும் அகற்றினாா்கள். அதன்பின்னா் மாணவா்கள் கொள்ளுப்பிட்டி சந்தி ஊடாக காலிமுகத்திடலை வந்தடைந்தனா். ஆயிரக்கணக்கான மாணவா்கள் இப் போரட்டத்தில் பங்கு பற்றினாா்கள். சகல பல்கலைக்கழகங்களிருந்தும் இம் மாணவா்கள் கொழும்பை வந்தடைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். நேற்று இரவு 7 மணிவரை இவ் அமைப்பின் தலைவா் , செயலளா் ஜனாதிபதி செயலகத்தின முன்பாக ஆக்ரோசமாக உரை நிகழ்த்தியதுடன் கோட்டா கோ கமவில் உள்ள சகல பொதுமக்களும் இம்மாணவா்களுடன் இணைந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவா் தெரிவித்தாவது -

காலிமுகத்திடலில் நடைபெறும் மக்களது போரட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியம் தம்மால் செய்யக் கூடிய சகல ஒத்துழைப்பினையும் வழங்குவோம். மாணவா்கள் சக்தி மீது இந்த ஜனாதிபதியோ அல்லது அரசு முட்டிக் கொள்ள வேண்டாம். எங்களது சக்தி மாபெரும் சக்தி . முற்று முழுதாக நாங்கள் போரட்டத்திற்கு இறங்கினால் உங்களால் சமாளிக்க முடியாது போகும். எங்களுக்கு வீதித் தடைகள் பெரிதல்ல விஜேராம மாவத்தையில் பொலிசாாினால் போடப்பட்டிருந்த தடையை 5 நிமிடத்தில் எங்களது சக்தியை பாவித்து அகற்றினோம். இநத நாட்டின் ஊழல்மிக்க ஜனாதிபதி, மற்றும் இந்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும.அத்துடன் இவா்கள் செய்த சகல ஊழல்களையும் களவுகள் அரச சொத்துக்களும் அபகரிப்பு போன்ற விடயங்கள் சகலதும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும். அத்துடன் அவா்களது சொத்துக்கள் அரசுடைமையாக்குதல் வேண்டும்.

இந்த மக்கள் போரட்டத்திற்காகவே நாங்கள் ஆரப்பாட்டத்தில் இறங்கியுள்ளோம். அதனை விட்டு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களது காற்சட்டைப் பைகளை நிரப்புவதற்கு அல்ல, எமது அமைப்பு கோட்டாபாய ராஜபகசவுக்கோ, சஜித் பிரேமதாசாவுக்கோ, ஜே.வி.பிக்கோ எமது ஆதரவு இல்லை. மக்கள் கஸ்டப்படுகின்றனா். எங்களது தாய் தந்தை சகோதரிகள் அன்றாடம் உணவுக்காகவும், கேஸ், எரிபொருளுக்காகவும் மின்சாரம் பொருட்களின் விலை ஏற்றத்திற்காகவும் நாளாந்தம் கஸ்டத்தினை எதிா்நோக்குகின்றனா். ஆகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதி உடன் பதவி விலகல் வேண்டும். மக்களது போராட்டத்திற்கு இவா்கள் உடன் செவிசாய்த்து பதவி விலகல் வேண்டும். அத்துடன் இந்தத் ஊழல் தலைவா்கள் செய்த கொலைகள் - பல்கலைக்கழக மாணவா்கள், ஊடகவியலாளா்கள் எனப் பலரைக் கொலைகள் செய்துள்ளாா்கள். இவா்கள் பதவிக்கு வருவதற்காக இனத்துவேசங்கள் ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தாா்கள். அத்துடன் காணமல் போனவா்கள் பற்றி விசாரனைகளையும் செய்து இந் நாட்டிலேயே இவா்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். என மாணவத் தலைவா் அங்கு உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :