பொருளாதார மீளெழுச்சி அமைச்சை உருவாக்கி பொருத்தமான முஸ்லிம் ஒருவரிடம் கொடுங்கள்- அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வலியுறுத்து



பொருளாதார மீளெழுச்சிக்கான அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி அதன் அமைச்சராக அல்லது இராஜாங்க அமைச்சராக பொருத்தமான முஸ்லிம் ஒருவரை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அவசரமாக கோரி உள்ளது.

இதன் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு
இன்று நாடு மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது. நாட்டு மக்கள் மிக பாரிய வாழ்வியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்து உள்ளது.

அரசாங்கம் அடங்கலாக அனைத்து தரப்புகளும் நாட்டையும், மக்களையும் முன்னிறுத்து இப்பேரவலத்தில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இப்பதவியில் தொடர்வதற்கு எடுத்து உள்ள தீர்மானத்தை நாம் வரவேற்று வாழ்த்துகின்றோம்.
அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு பொதுவாக சர்வதேச சமூகத்தினதும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளினதும் பேருதவியை பெற்று தருவார் என்கிற நம்பிக்கை கீற்று தென்படுகிறது.

இதே நேரத்தில் பொருளாதார மீளெழுச்சிக்கான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும். இதன் அமைச்சராக அல்லது இராஜாங்க அமைச்சராக பொருத்தமான முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

நிதி அமைச்சும், பொருளாதார மீளெழுச்சிக்கான அமைச்சும் இணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுவாக சர்சதேச சமூகத்தின் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை பெறுவது இலகுவானது ஆக்கப்படும்.
மேலும் உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு அமைச்சு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த இறுதி காலத்தில் இவ்வமைச்சு பிரத்தியேகமாக உருவாக்கப்ப்ட்டது.

இதன் அமைச்சராக பசீர் சேகு தாவூத் நியமிக்கப்பட்டார். தற்போது அவரை தேசிய பட்டியல் எம். பியாக கொண்டு வந்து இதே அமைச்சு பதவியை அவருக்கு வழங்க முடியும். அல்லது பொருத்தமான வேறு அமைச்சு பதவியையும் வழங்கலாம்.
ஏனென்றால் பசிர் சேகு தாவூத் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நீண்ட அரசியல் அனுபவம் உடைய தலைவர். நாட்டையும், மக்களையும் நேசிப்பவர். புத்திஜீவி. சிறந்த வியூகி.
மட்டும் அல்லாமல் நம்பிக்கைக்கும், விசுவாசத்துக்கும் மாத்திரமான திறமைசாலிகளை இனி மேலாவது அரசாங்கம் அரவணைத்து வைத்திருக்க வேண்டும்.
மர்ஜான் பளீல் நம்பிக்கைக்கும், விசுவாசத்துக்கும் பாத்திரமானவர்தான். ஆனால் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற தேசிய பட்டியல் மூலம் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் கிடையாது என்பது கண் முன் நிரூபணமாகி நிற்கின்றது.
இதே நேரம் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவ்ர்கள் எமது மக்களை குறுகிய சுய இலாப அரசியலுக்காக தொடர்ந்தும் பிழையாக வழி நடத்தி கொண்டிருப்பதை கை விட வேண்டும். நாட்டையும், மக்களையும் இப்போதாவது சிந்திக்க வேண்டும்.
ராஜபக்ஸக்களை பழி வாங்குவதன் மூலமோ, பதவி நீக்குவதன் மூலமோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமோ எந்த விமோசனமும் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்க போவதே இல்லை என்கிற யதார்த்தத்தை எதிர் கட்சிகள் அனைத்தும் புரிந்து நடக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :