கொழும்பு போராட்ட களத்தில் கல்முனை பெண்மணியின் ஒருநாள் அனுபவம்!



யிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பிறகு ஒரு முஸ்லிம் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்துவத்தில் எவ்வளவோ பிரயத்தனங்கள் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
நேற்றைய நாள் நான் ஒரு முஸ்லீமாக தலையில் ஒரு முக்காட்டைப் போட்டதன் மதிப்பு எவ்வாறு இருந்தது என்பதை சொல்ல வார்த்தையே இல்லை.

பிள்ளைகளும் சிறு சிறு குழந்தைகளாய் இருந்ததாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்தனை பேரின் கவனமும் எங்கள் மீதே திரும்பியிருந்தது என்பதை சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது.

ஆரம்பமாக சுமார் காலை 11 மணியிருக்கும் சம்பவ இடத்திற்கு செல்கின்றோம். என் குழந்தைகளின் கைகளில் இருந்த பதாதைகளை வைத்து போட்டோ ஒன்று பிடித்து பேஸ்புக் ல போட்டுவிட்டு MC க்கு போய் ரெஸ்ட் ஆயிட்டு பின்னேரம் 5 மணி போல வருவதே எங்களது பிளான்
ஆனாலும் அங்கு நாங்கள் அனைவரும் கவனிக்கப்பட்ட விதமும் ஆர்ப்பாட்டக் காரர்களின் அந்த உணர்ச்சிமிகு போராட்டமும் எங்களை வெயில் என்றும் பாராமல் குழந்தை குட்டிகளோட அங்கேயே கட்டிப் போட்டுவிட்டது. சுப்ஹானல்லாஹ்.

சாப்பாடு பகிர்ந்தவர்களும் சரி ஆங்காங்கே எங்களைக் கண்டதும் ஒரு நிமிடம் நின்று கேட்டு நாங்கள் நோன்பு என்று சொன்னதும் பெரிதாய் ஆச்சரியப்பட்டு குழந்தைகளின் தலையை தடவிக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

ஆரம்பத்தில் போறதா வேணாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது எம்மவர்களில் ஒருவராக களத்தில் நின்ற அல் அமீன் நானாவிடம் வெலாவாரியாக பேசிவிட்டே முடிவும் எடுத்தோம். இருந்தும் அடி மனதில் ஏதோவோர் பயம் இருந்துகொண்டே இருந்தது.

போறவழியில் அஸீம் ஜௌபர் அவர்களுக்கும் பேசி அவர் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டே களத்திற்குச் சென்றோம். ஆனாலும் அவர் அங்கில்லை.
இருப்பினும் அங்கிருந்த போராட்டக் காரர்களான பெரும்பான்மை இனத்தவர்களின் உதவியும் உபசரிப்பும் எம்மவர்களையே மறக்கடிக்கச் செய்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு நாலு நாலரை மணி இருக்கும் குழந்தை சற்று டயட் ஆனதும் ஒரு ஓரமாப் ஒதுங்கி பக்கத்தில் அடுக்கியிருந்த ஒரு மடிக்கும் மெத்தை ஒன்றுதான் கேட்டேன். சொன்னா நம்பவே மாட்டீர்கள் வேறு ஏதோ போஸ்டர் வேலை செய்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்து ஒவ்வொன்ராய் விரித்து அதில் தண்ணி பட்டு இருக்கு என்று புல்லா chek பண்ணி நாலு மெத்தைக்குப் பிறகு ஒரு மெத்தை எடுத்து விரித்து தந்தது மட்டுமல்லாது அதில் இன்னொரு பேனரும் விரித்துத் தந்தார்கள்.

தொடர்ந்தும் ஐந்து ஐந்தரை இருக்கும் லைட்டா மழை தூறல் விழ ஆரம்பிக்குது. அல்லாஹ் இனி எப்படி பிள்ளைகள வைத்துக் கொண்டிருப்பது என்று தடுமாறி மச்சானையும் பிள்ளைகளையும் தேடுகிறேன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாரும் இல்லை.
ஒருவாறா சுதாகரித்துக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில் ஒரு சவப்பெட்டிபோல் ஒரு பெரிய மட்டை பெட்டியை கொண்டு வந்து இறக்கினார்கள்.

நானும் என்னமோ தெரியா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதற்குள்ளிருந்து ஒரு வகையான குழாய்களும் சீட்டுமாக என்னென்னமோ எடுக்கிறார்கள். என்னவா இருக்கும் என்று என்னால் யூகித்துக் கொள்ளவே முடியவில்லை.

அதற்குள் அங்கால எழும்பு இங்கால திரும்பு என்று ஆளாளுக்கு என்னையும் என் பொருட்களையும் அங்காலயும் இங்காலையுமா அலைக்களிக்கின்றார்கள். அரைகுறை சிங்களத்தோடு பயங்கரமான பதட்டத்தோடு பிள்ளையை தூக்கி கையில் எடுத்து தோழில் போட்டுக்கொண்டு மெதுவாய் நகரப் பார்க்கிறேன்.

அப்பவும் அங்க நில்லுங்க இங்க நில்லுங்க என்று இழுத்து என்னை பிடித்து வைக்கிறார்கள். அப்புறமாத்தான் எனக்கும் விளங்கிச்சு அவர்கள் கொண்டு வந்து செட் பண்ணிக் கொண்டிருப்பது ஒரு 10x20 டென்ட்.. மாஷா அல்லாஹ்.
அதை செட் பண்ணி முடித்துவிட்டு என்னையும் என் குழந்தையையும் சேப்பாக அதில் அமர்ந்தத்துகின்றர்கள். என்னால் என்னை நம்பவே முடியவில்லை.

அப்புறமாத்தான் என் கணவரும் பிள்ளைகளும் வருகிறார்கள் உம்மா ஜாயி கூடாரம் ஒன்றில் இருக்கிறா என்று அங்கலாய்த்துக் கொண்டே. நானும் அவரிடம் முறையிடுகின்றேன். இது எனக்கென்றே கொண்டு வந்த மாதிரியே இருக்கு என்று.

அப்படியே இருக்கிறேன் மழை கொஞ்சம் அதிகரிக்கிறது. குழந்தை கீழே படுத்துக் கொண்டிருக்கின்றான். முன்னாடி பார்த்தால் பலபேர் சேர்ந்து மறைத்து நிற்கின்றனர். ஒரு துழி கூட என் குழந்தை மேல் தெறிக்கவே இல்லை.
சுமாரா நோன்பு திறக்கும் நேரம் நெருங்குகிறது. அவ்வளவு பெரிதாய் நோன்பு திறக்க ஏதும் செய்வதாக தெரியலியே. என்று கேட்கிறேன் மழையினாலாக்கும் என்று என் கணவர் சொல்கிறார்.

அப்படியே இருந்ததுதான் தாமதம். ஒவ்வொரு பெட்டியாய் உணவுப் பண்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது. சாப்பாட்டு பொக்ஸ் வேற.
பெட்டி நிறய 12/15 சோடா இருக்கும். இவ்வளவும் நமக்கெதுக்கு என்பதோடு நோன்பு பிடித்த வாய்க்கு சோடா சூடா இருக்குமே மில்க் பக்கட் என்றால் பரவால்ல என்று நானும் சொல்ல மச்சானும் போய் இருக்காண்டு விசாரிக்க அதிலும் ஒரு பெட்டி.

இம்புட்டயும் நாம என்ன செய்ய என்று அக்கம் பக்கம் இருக்கிரவங்களுக்கு நாங்களே பகிர்கிறோம். இனி நோன்பு திறக்குற நேரமும் சரியாக தெரியவில்லை. கல்முனையில 6:13 தானே அப்போ கொழும்புல குத்து மதிப்பா 6:18 ஆ இருக்கும் என்று பேசிக்கிட்டிருக்கோம். அங்கிருந்து ஒருத்தர் மழையில் குடையும் இல்லாமல் ஓடோடி வருகிறான். அய்யா அதான் சொல்றாங்க நோன்ப திறங்க என்று சிங்களத்துல அவரே சொல்கிறார். அப்படியே நோன்பு திறந்த கையோடு முட்ட முட்ட எல்லாம் சாப்பிட்டும் ஆச்சு பிள்ளை கொஞ்சம் அரல ஆரம்பிக்கிறான்.

ஒருவாறா தட்டி தூங்க வைக்கலாம் எண்டு பார்க்கிறேன்.
பின்னால் இருந்த ஒரு மனிசி கூதலா இருக்கும் என்று சிங்களத்துல சொல்றா நானும் என் கணவரும் அந்த சீட்டில் இருக்கும் தண்ணீர் துழிகளை எங்கள் கைகளால் துடைக்க முற்பட பின்னுக்கிருந்த ஒரு முதியவர் தன் தலையில் இருந்த ஒரு தொப்பியை எடுத்து அவசர அவசரமா துடைத்து விடுகிறார்.
இத்தனைக்கும் காரணம் நான் போட்டிருந்த முக்காடுதான் என்று சொன்னால் நம்பவே மாட்டீர்கள்.
 
எனக்கோ பலத்த சந்தோஷம் மதங்களை தாண்டி மனங்கள் ஜெயித்து விட்டது.
இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.


நபீஸா மபாஸ் கல்முனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :