கேணி நகர் மதீனா வித்தியாலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கேணி நகர் மதீனா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மெளலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.ஏ.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.சலாம், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஐ.எஸ்.ஆர்.சீ.சிறிலங்கா அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்தில் ஆசிரியர்களுக்கான பல்தேவை தொகுதி, கலாச்சார மண்டபம், மாணவர்களுக்கான வகுப்பறை தொகுதி ஆகியவை அமைவுள்ளன என்று பாடசாலையின் அதிபர் ஏ. மீரா முகைதீன் தெரிவித்தார்.
பாடசாலைக்கு அவசியத் தேவையாக காணப்பட்ட இவ் கட்டடத் தொகுதி அமைய முயற்சிகளை மேற்கொண்ட ஏ.எல். ஜுனைத் நளீமி மற்றும் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நோன்பு திறப்பதற்கான (இப்தார்) ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :