தெஹிவளை -கல்கிசை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வருடாந்த இப்தாா் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை -கல்கிசை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் வருடாந்த இப்தாா் நிகழ்வொன்றை நேற்று 17 ஞயிற்றுக்கிழமை தெஹிவளை களுபோவில முகையிதீன் ஜம்ஆப் பள்ளிவாசலில் ஹாஜி இஸ்மாயில் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது. 
இந் நிகழ்வுக்கு கொழும்பு மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் பரிபலான சபையின் தலைவா் செயலாளா்கள் உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டனா். செயலாளா் சிறஜ அலி தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் தொற்று நோய் காரணமாக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறவில்லை. தற்பொழுது பள்ளிவாசல்களில் வழமையாக இப்தாா் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனத் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :