கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபகமும் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் இடம்பெற்றது
புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிசினை தொடந்து கொடியேற்றப்பட்டதுடன் வருடாந்த இப்தார் வைபகமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீட், தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப், ஜனாதிபதி செயலணி உறுப்பினர் முபீஸால் அபூபக்கர், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்பாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள், கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment