அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டுக் கழகமான சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவும்,இப்தார் நிகழ்வும் கழகத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பல அதிதிகளின் பங்குபற்றலுடன் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நேற்று(16) நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்பமாக 2022 ஆம் ஆண்டுக்கான நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது இதன் போது கழகத்தின் தலைவராக ஏ.பாயிஸ் அவர்களும்,செயலாளராக யூ.கே.ஜவாஹிர் அவர்களும், பொருளாளராக ஏ.ஏ.எம்.பார்விஜ் உட்பட 23 பேர் நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் நிகழ்வின் அங்கமாக கிரிக்கெட் விளையாட்டில் அண்மைக் காலங்களில் சிறந்த முறையில் பிரகாசித்த கழகத்தின் வீரர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
ஒற்றுமையும் விட்டுக்கொடுப்பும் எனும் தலைப்பில் மெளலவி அப்துல் கரீம், அவர்களும் நோன்பின் முக்கியத்துவம் பற்றி மெளலவி அப்துல்லாஹ் ஆகியோரினால் சன்மார்க்க சொற் பொழிவு இடம் பெற்றது .
இதேவேளை குறித்த மியன்டாட் விளையாட்டுக் கழகமானது ஆரம்பிக்கப்பட்டு 30 வருட பூர்த்தி நிகழ்வுகள் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment