மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
நேற்றிரவு (25) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment