ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளை (28) காலை நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம்,அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எரிபொருள் விலையேற்றத்தால் ஆசிரியர்கள்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர். பேருந்துகளுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் அதிகளவில் பணத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கம் அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து உடனடி தீர்வை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment