இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒழித்தவர்கள் இன்று முகாவுக்குள் வந்து சேர்கின்றார்கள், அவர்கள் தொடர்பில் தலைமை அவதானமாக இருக்கிறது : முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான்



நூருல் ஹுதா உமர்-
ட்சியில் நன்கு அனுபவித்து விட்டு வேறு கட்சி தாவி மீண்டும் வந்தவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் குறிப்பிட்டார். சாய்ந்தமருது அல் ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், கட்சி மாறுவதை தொழிலாகக் கொண்டவர்கள் , அவ்வாறு கட்சி தாவி நன்கு அனுபவித்து விட்டு , துரோகம் இழைத்து விட்டு மீண்டும் எம் பக்கம் வருவோர் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வாறானோர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. ஊர் ஒரு பக்கமும் நாங்கள் ஒரு பக்கமும் நின்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒழித்தவர்கள் இன்று முகாவுக்குள் வந்து சேர்கின்றார்கள். முகாவின் கதவு என்றுமே திறந்துள்ளது. எவரும் வரலாம். ஆனால் அவர்கள் குறித்து தலைமைக்கும் கட்சிக்கும் தெளிவான பார்வை உள்ளது.

முகாவில் நீண்ட வருடகாலமாக இருக்கின்றேன். தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்றேன். நான் பிறந்த மண்ணோடு தொடர்போடு இருக்கின்றேன். தேர்தல் சீசனுக்காக ஊருக்கு வருபவன் நான் அல்ல என்பதை மக்கள் அறிவர். எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் முதல் வருகின்ற தேர்தலில் உரிய அந்தஸ்தை தலைமையும் கட்சியும் எமக்கு வழங்கும் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கிறது. அதைவிடுத்து சிலரின் கிசு கிசு பேச்சுக்களை நாம் நம்பத் தேவையில்லை. உரிய கௌரவமான இடத்தில் தலைவரால் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :