மண்ணெண்னை மற்றும் பெற்றோலுக்கான வரிசைகள் இன்றும்...

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ண்ணெண்னை மற்றும் பெற்றோலுக்கான வரிசைகள் இன்றும் தலை நகர் கொழும்பில் காணப்பட்டன. குறிப்பாக கிரேண்ட்பாஸ் ஸ்N;டஸ் றோட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் மண்ணெண்னை மற்றும் பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது காலை 6 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

பாடசாலை மாணவர்கள் பெண்கள் வயோதிபர்கள் என்று பலதரப்பினரும் மண்ணெண்னையைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் ஒளிப்படமே இது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னை இல்லையென எழுத்து மூலம் போடப்பட்ட நிலையிலும் மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக உணவு மற்றும் தண்ணீர் இன்றி காலையில் இருந்தே வரிசைகளில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக நண்பகல் 1.30 மணிவரை எரிபொருள் கொள்கலன் வராததையும் காண முடிந்தது..

தமது ஏனைய வேளைகளைக்கூட அப்படியே விட்டுவிட்டு மண்ணெண்னை எடுப்பதவற்ககாக பசியுடன் காத்திருந்ததையும் குறிப்பாக நாளை முஸ்லிம்களின் புனித நோன்பு ஆரம்பமாக இருக்கும் இத்தருணத்தில் இரவில் மினசாரம் இல்லாவிட்டாலும் என்ன செய்வதென்று தெரியாதவரிகளாக மக்கள் காணப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :