நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் நடாத்திய வருடாந்த இப்தார் விஷேட நிகழ்வு 2022.04.11 நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுர் கிராமத்தில் இடம்பெற்றது இடம்பெற்றது.
பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றிசான் ஜெமீல் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக "மதங்களின் ஊடாக மானிடம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இப்தார் விஷேட நிகழ்வில் அட்டப்பள்ளம் பகுர் கிராமத்தில் உள்ள மக்களுடன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப், நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எஸ் எம் பி எம் பாறூக் இப்றாகீம், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் எம் ஜே இஸட் எம் ஜமால்டீன், பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகர் எஸ் அஹமது, செயலாளர் ஏ புஹாது, டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
நலன்புரி முகாமையாளர் எஸ் எம் அஜ்வத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மக்கள் வாழ்வில் அமைதியும் சுபீட்சமும் நிலவ வேண்டி பேஷ் இமாம் மௌலவி அல் ஹாபிழ் சிம்லி ஆதம் அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment