நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின் துண்டிப்பினை தொடர்ந்து குடிநீர் வினியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் நீர்ப் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் நீரைப் பெற்றுக் கொள்ளும் பாவனையாளர்கள் தமக்கு நாளாந்தம் தேவைப்படும் நீரை சேமித்து வைத்துக் கொள்வதோடு நீரை வீண் விரையம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் இதுவரை குடிநீர் பாவனைக்கான கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்கள் நீர்க் கட்டணத்தை செலுத்தி நீர்த்துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment